செய்திகள்,திரையுலகம் முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை காஜல்அகர்வால்!…

முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை காஜல்அகர்வால்!…

முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை காஜல்அகர்வால்!… post thumbnail image
சென்னை:-நடிகை காஜல்அகர்வால் ஹைங் கோ ஹையானா என்ற இந்தி படத்தில் தங்கை வேடத்தில் அறிமுகமானார். அதையடுத்து லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக உயர்ந்தார்.பின்னர், பரத் நடித்த பழனி படத்தில் தமிழுக்கு வந்த காஜல்அகர்வால், சரோஜா, பொம்மலாட்டம் என்று தென்னிந்திய சினிமாவில் பிசியாகி விட்டார்.

அவர் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. சினிமாவில் தனக்கு வரவேற்பு தொடர்ந்து இருப்பதால், தங்கை நிஷா அகர்வால் திருமணம் செய்து கொண்டபோதும் தனது திருமணத்தை தள்ளி போட்டு வருகிறார் காஜல்அகர்வால்.மேலும், தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமில்லாமல் எளிமையாக கொண்டாடி வரும் காஜல், தனது 29 வது பிறந்த நாளை கடந்த ஜூன் 19ம் தேதி அன்று எளிமையாக மும்பையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். அன்றைய தினத்தில் அங்குள்ள முதியோர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளையும் தனது கையால் உணவு பரிமாறி மகிழ்ந்துள்ளார் காஜல்அகர்வால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி