செய்திகள் தென் ஆப்பிரிக்காவில் பழமைவாதிகளுக்கு மனைவியை பரிசளித்த தலைமை அதிகாரி!…

தென் ஆப்பிரிக்காவில் பழமைவாதிகளுக்கு மனைவியை பரிசளித்த தலைமை அதிகாரி!…

தென் ஆப்பிரிக்காவில் பழமைவாதிகளுக்கு மனைவியை பரிசளித்த  தலைமை அதிகாரி!… post thumbnail image
கேப்டவுன்:-தென் ஆப்பிரிக்காவில் லிம்போபோ மாகாணத்தில் அங்குள்ள பழமைவாதி தலைவர்களுக்கு பெண்களை பரிசாக வழங்கும் மூட பழக்க வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது.இதற்கு அங்குள்ள பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அந்த பழக்கம் நின்றபாடில்லை. சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள தொகோயாண்டோ பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு 10 பெண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தென் ஆப்பிரிக்காவின் டி.வி. ஒளிபரப்பு கார்ப்பரேசனின் தலைமை அதிகாரி ஹலாடி மோட்சோனெங்கின் மனைவியும் ஒருவர்.இவர் தனது இளம் மனைவியை பழமை வாதிகளின் தலைவர்களுக்கு பரிசாக அளித்தார். அவருடன் பசுவையும், கன்றையும் வழங்கினார். இந்த மூட பழக்க நிகழ்ச்சியில் வனேகா முட்ஸ்வாரி என்ற பெண்ணும் வரிசையில் நின்றிருந்தார்.இவர் மனித வள மேம்பாடு மேலாண்மை மாணவி ஆவார். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி