நாளை காலை நாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வாருங்கள் தலைவருடன் போட்டோ எடுக்கலாம் என்று பிரேமலதா கூறிவிட்டு வந்திருக்கிறார்.
மறுநாள் காலை பாண்டிச்சேரி, கும்பகோணம், காரைக்குடி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் பிரேமலதா சொன்னபடி போட்டோ எடுக்க விஜகாந்த் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றனர். அங்கு பிரேமலதா வரவேற்பில் அறையை காலி செய்வதற்காக பார்மாலிட்டிக்சில் இருந்தபோது வெளியில் நின்று கொண்டிருந்த விஜயகாந்திடம் போட்டோ எடுக்க விரும்பம் தெரிவித்தனர். அவரும் ஒப்புக்கொள்ளவே மாறி மாறி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஷாஜஹான் என்ற ரசிகர் விஜயகாந்துடன் திரும்ப திரும்ப நின்று போட்டோ எடுத்திருக்கிறார். இதனால் கடுப்பான விஜயகாந்த் “நீ என்ன போட்டோ எடுத்து விளையாடிக்கிட்டிருக்கியா? என்ற கேட்டபடி பளார் என்று கன்னத்தில் அறைந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இதுபற்றி பிரேமலதாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் இதை பெருசு படுத்தாதீங்க என்று அவர்களிடம் சொல்லிவிட்டு விஜயகாந்திடம் வந்து என்னங்க இப்படி பண்ணிட்டீங்க என்று கடிந்து கொண்டிருக்கிறார். அப்போதும் கோபம் தணியாத விஜகாந்த் “இப்ப என்ன நான் மன்னிப்பு கேக்கணுமா ஸாரி…ஸாரி… ஸாரி.. போதுமா என்று அந்த ரசிர்களை பார்த்து கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். இது மலேசிய தமிழ் இளைஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் தங்களின் சமூக வளைத்தளங்களில் இதுபற்றி கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி