புதுடெல்லி:-ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இந்திய தொழிலாளர்களும், நர்சுகளும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்க அங்குள்ள தூதரகம் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.
16 இந்தியர்கள் மீட்கப்பட்டு வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமான போக்குவரத்து இல்லாததால் அவர்களை சவூதிஅரேபியா வழியாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.இதே போல் மற்றவர்களையும் சவுதிஅரேபியா உதவியுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி