இதனால் ஊர் சுற்றி புராணம் படம் பாதியிலேயே முடங்கியது. இதனால் களஞ்சியம் அதிர்ச்சியானார். அவர் மீது டைரக்டர் சங்கம், தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளித்தார். அஞ்சலியால் தனக்கு ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனாலும் அஞ்சலி நடிக்க வர வில்லை.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் தமிழ் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் களஞ்சியம் எதிர்த்தார். தனது படத்தை முடிக்காமல் எந்த படத்திலும் அஞ்சலி நடிக்க கூடாது என்றார். மீறி நடித்தால் அந்த படத்துக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு போவேன் என்றார்.
இதனால் ஜெயம் ரவி படத்தில் இருந்து அஞ்சலியை நீக்கிவிட திட்டமிட்டனர். ஆனால் அந்த முடிவை மாற்றிவிட்டு அஞ்சலியை தற்போது ஒப்பந்தம் செய்து விட்டனர். அஞ்சலி நடிப்பதை டைரக்டர் சுராஜும் உறுதிப்படுத்தி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி