செய்திகள்,முதன்மை செய்திகள் குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!… post thumbnail image
அகமதாபாத்:-குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 411 சிங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி சிங்கங்கள் 20000 சதுரகிலோமீட்டர் அளவில் பரவி இருப்பதும் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் சிங்கங்கள் தங்கள் பரப்பை அதிகரித்தது தொடர்பாக மேலும் நடத்தப்பட்ட களப்பணியில் பல அதிர்ச்சியூட்டும் முடிவுகள் தெரியவந்துள்ளன. அதில் சுமார் 250 சிங்கங்கள் இந்த ஐந்தாண்டுகளில் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. 2012-13ல் சுமார் 48 சிங்கங்களும் 2013-14ல் சுமார் 53 சிங்கங்களும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வருடத் தொடக்கத்தின் முதல் மூன்று மாதத்திற்குள் சுமார் 20 சிங்கங்கள் இதுவரை இறந்துள்ளன. இவற்றில் எட்டு சிங்கங்கள் விபத்தில் பலியாகி உள்ளன. அவற்றில் ஆறு ரயில் மோதி பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கங்களின் இறப்பை தடுக்கும் நோக்கில் அரசு திட்டங்களை இயற்றி விரைவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி