சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா நடித்துள்ள ‘கத்தி’ திரைப்படம் தீபாவளி வெளீயிடாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது.
இப்படத்தின் கதாநாயகன் விஜய்க்கு நாளை பிறந்த நாளாகும். அதனை முன்னிட்டு இன்று இரவு சரியாக 12 மணிக்கு கத்தி திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முருகதாசும் விஜய்யும் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி