சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கியவர்.
அடுத்து அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தை இயக்கினார். அடுத்து இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் என்ற படத்தையும் இயக்கினார்.சிம்பு தேவன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையிலான படங்களாக இருக்கும். முக்கியமாக சமகாலப்படங்களைவிட, பீரியட் பிலிம் இயக்குவதில் ஆர்வம் உள்ளவர். தற்போது விஜய்யை வைத்து அவர் இயக்க உள்ள படமும் கூட பீரியட் பிலிம்தானாம்.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜா நடிப்பில் ராஜமௌலி இயக்கிய மகதீரா தெலுங்குப்படத்தைப்போல் பிரம்மாண்டமான பீரியட் பிலிமாக இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம் சிம்புதேவன். 50 படங்களைக் கடந்துவிட்ட விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம் இதுதான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி