செய்திகள்,திரையுலகம் மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…!

மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…!

மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…! post thumbnail image

சித்தார்த், தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன், லூசியா படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஜிகர்தண்டா படம் முடிந்து விட்டது.

இதில் சித்தார்த் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி கோவிலுக்கு சித்தார்த் சென்றார். அங்கு மொட்டை போட்டார். பின்னர் கோவிலை சுற்றி வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ஜிகர்தண்டா படம் வெற்றி பெற கடவுளை பிரார்த்தனை செய்தார். சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதியில் சாமி கும்பிட்டார்கள்.

சித்தார்த்தும் நடிகை சமந்தாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஒன்றாகவே கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தார்கள். தற்போது சித்தார்த் மட்டும் தனியாக திருப்பதிக்கு சென்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி