வான்வழி, கடற்பரப்பு மற்றும் கடலின் அடிப்பகுதி என்று பல வகையிலும் பல நாடுகள் ஆஸ்திரேலியாவின் தலைமையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஆயினும் எந்தவிதமான பலனும் கிடைக்காததால் மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் முயற்சி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.ஆனால் அதன் பின்னர் கடந்த மாதம் விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து சத்தம் கேட்டதாகக் குறிப்பிடப்பட்ட இடத்தைச் சுற்றி ஆழ்கடலில் மீண்டும் தேடுதல் வேட்டையை ஆஸ்திரேலியா தொடர்ந்தது. இதற்கு அடுத்த கட்டமான ஆழ்கடல் தேடுதல் விமானம் விழுந்திருக்கக்கூடும் என்று முதலில் சந்தேகிக்கப்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளி இந்தியப் பெருங்கடலில் நடத்தப்படக்கூடும் என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் தலைமை கமிஷனரான மார்டின் டோலன் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த பணியில் ஆழ்கடலில் இடிபாடுகளைக் கண்டறிய சக்தி வாய்ந்த சோனார் கருவிகள் பயன்படுத்தப்பட்டு 6௦,௦௦௦ சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியைத் தொடரும் அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என்று அவர் கூறினார்.அந்தப் பகுதியிலிருந்துதான் விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் தங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி