சென்னை:-டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்-3டி என்ற ஹாலிவுட் படம் ஜூலை மாதம் 11ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் வெளிவர உள்ளது. மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ள இப்படத்தில் கேரி ஓல்டு மேன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
மிக பயங்கர அழிவு சக்தி உடைய சில நாசகார கிருமிகளின் கோரப்பிடியில் இருந்து தப்பிய மனித குலத்துக்கும், மனித குலத்தின் மூதாதையர் என கருதப்படும் குரங்குகளுக்கும் இடையே ஒரு பெரும் போர் வெடிக்கின்றது.அதற்கு பின்னர் அமைதி நிலவினாலும், அவர்கள் இடையே நடக்கும் பனிப்போர் மீண்டும் பெரும் போருக்கு வழிவகுக்கிறது. புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட ‘மோ-காப்’ என்ற தொழில்நுட்பம் இந்த படத்தில் அறிமுகமாவது சிறப்பாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி