புதுடெல்லி :- கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது.
இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு மற்றும் ரெயில்வேயில் வெளிநாட்டு நேரடிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ரெயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாக முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, இன்று ரெயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி