இந்த ஓட்டெடுப்பில் நேரடியாக 18 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேரும், தபால் மூலமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 261 பேரும், இணையதளம் மூலம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 91 பேரும் என, மொத்தம் 34 லட்சத்து 98 ஆயிரத்து 650 பேர் ஓட்டளித்துள்ளனர்.இதில் இளைய தளபதி விஜய் 12 லட்சத்து 80 ஆயிரத்து 300 வாக்குகளுடன் முதலிடம் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டார் ஆனார்.
இரண்டாம் இடம் பிடித்த அஜீத் 12 லட்சத்து, 17 ஆயிரத்து 650 ஓட்டுகள் பெற்றிருந்தார். மூன்றாவது இடம் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அவர் 5 லட்சத்து 47 ஆயிரத்து 50 ஓட்டுகள் பெற்றிருந்தார்.தனுஷ் 4ம் இடத்தையும், விக்ரம் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர். சிம்புவுக்கு 6வது இடமும், ஆர்யாவுக்கு 7வது இடமும், ஜீவாவுக்கு 8வது இடமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டராக விஜய்யை அந்த வார இதழ் அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி