இப்படி ஆரம்பித்தவர், அதையடுத்து தில்லாலங்கடியில் தமன்னாவுடன் நடித்தபோது அவர் தன்னை கலாய்க்குமபோது பதிலுக்கு இவரும் கலாய்த்தார். அப்படி பேசத் தொடங்கிய ஜெயம் ரவி, இப்போதெல்லாம் நன்றாக பேசக்கூடிய நடிகைகள் தன்னுடன் நடித்தால் ஓய்வு நேரங்களில் படப்பிடிப்பு தளத்தை அரட்டை அரங்கமாக்கி விடுகிறார்.
அந்த வகையில் தற்போது, ‘தனி ஒருவன்‘ படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருபவர், அவர் மீது கொண்ட மரியாதையினால் அடக்கி வாசித்து வருகிறார். ஆனால் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் தன்னுடன் நடித்து வரும் ஹன்சிகாவை தினம் தினம் கலாய்த்து எடுக்கிறாராம் ஜெயம்ரவி.
ஏற்கனவே எங்கேயும் காதல் படத்திலேயே இணைந்து நடித்த ஜோடி என்பதால், ஹன்சிகாவும் அவர் என்ன பேசினாலும் அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறாராம். இருப்பினும், சமீபகாலமாக அம்மணிகளை கலாய்ப்பதில் ஜெயம்ரவி படு கில்லாடியாகி விட்டதால், அவரது தாக்குதலை ஹன்சிகாவினால் தாக்குப்பிடிக்க முடியாமல், அடிக்கடி கேரவனுக்குள் சென்று தலைமறைவாகிக்கொள்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி