சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது.இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கௌதமி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதமி திரிஷ்யம் ‘ரீமேக்’ மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.திருநெல்வேலி பின்னணியில் இந்த படத்தை எடுக்கின்றனர். திருநெல்வேலியில் வசிக்கும் நடுத்தர தம்பதி கேரக்டரில் கமல், கவுதமி நடிக்கின்றனர். கமல், படம் முழுவதும் நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார். இதற்காக அவர் நெல்லை தமிழ் பேசி பயிற்சி எடுத்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி