செய்திகள்,திரையுலகம் ஜப்பானில் சாப்பாட்டுக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்!…

ஜப்பானில் சாப்பாட்டுக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்!…

ஜப்பானில் சாப்பாட்டுக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த்மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள். இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதன் எதிரொலியாக ஸ்ரீதேவி தமிழ், இந்தியில் நடித்த இங்லிஷ் விங்லிஷ் என்ற படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது.இதையொட்டி ஜப்பான் சென்ற ஸ்ரீதேவி அந்நாட்டு பிரதமர் மனைவி அகி அபியை சந்தித்ததுடன் அவருக்கு படத்தை திரையிட்டு காட்டினார். படத்தை பார்த்த ஜப்பானியர்கள் பலர் ஸ்ரீதேவியின் ரசிகர்களாக மாறினர்.

படத்தில் ஸ்ரீதேவி பெயர் சாஷி. இந்த பெயரில் சாஷி மீல்ஸ் என்ற உணவு வகை அங்குள்ள ஓட்டல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இனிப்பு வகை சிலவற்றுக்கும் இப்பெயர் வைத்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி