ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசிலில் நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்தது. நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நெதர்லாந்திடம் 1–5 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. அந்த அணி 2–வது ஆட்டத்தில் தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலியை எதிர்கொண்டது.இதில் சிலி 2–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.
இந்த தோல்வி மூலம் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டது.கடந்த 6 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்பெயின் அணியின் கதை முடிந்தது. 2008, 2012ம் ஆண்டுகளில் ஐரோப்பிய கோப்பையையும், 2010ம் ஆண்டு உலக கோப்பையும் அந்த அணி வென்று இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி