புனே:-தமிழகத்தில் தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாயாக உள்ள வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் மாதத்தில் கிலோவுக்கு ரூ.100 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சலில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் உருளைகிழங்கின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் விதைகளின் விலையும் கடந்த வருடத்தை விட 400 மடங்கு உயர்ந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அடிக்கடி விவசாயம் பாதிக்கப்படுவதால் வெங்காயம் பயிரிடப்படும் பரப்பளவும் வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். நடுத்தர மற்றும் ஏழை மக்களை மிரட்டக்கூடிய அளவுக்கு வெங்காயத்தின் விலை உயரக்கூடும் என்பதை முக்கிய வியாபாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி