ஒரு ட்விட்டில், இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எனக்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி. மீடியா மற்றும் நண்பர்கள் என்னைத் தனிமையில் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. வீட்டுக்கு வெளியே நிற்கும் பத்திரிகையாளர்கள் கிளம்பிச் செல்லலாம். காரணம் நான் வெளிநாட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்,என்று தெரிவித்துள்ளார். நான் வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை. எனவே உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட வேண்டாம். என் குடும்பத்துடன் சில காலம் நிம்மதியாக இருக்க விரும்புகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் மீது நான் எப்போதுமே பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் வாய்க்காத தந்தை மாதிரி. அதை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.அடுத்த ட்வீட்டில்,கலைஞர் மீது நான் எப்போதுமே பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் வாய்க்காத தந்தை மாதிரி. அதை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
என்னையும் என் முடிவையும் புரிந்து கொண்டு மதிப்பளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. நிச்சயம் ஒரு நாள் அவர்களுடன் பேசுவேன்,என்று இன்னொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார் குஷ்பு.
திமுகவிலிருந்து விலகும் முடிவை அரை மனசோடு எடுக்காமல், இப்போதாவது எடுக்க முடிந்ததில் சந்தோஷம். அங்கு இருந்த வரை என்னால் முடிந்ததை சிறப்பாக செய்தேன். இனி என் மகள்கள்தான் உலகம்.சிலர் நான் கலைஞரை @kalaignar89 ட்விட்டரில் அன்ஃபாலோ செய்ததாக கூறியுள்ளனர். எப்படி கண்மூடித்தனமாக இப்படி சொல்கின்றனர். நான் ஒருபோதும் அவரை அன்ஃபாலோ செய்யவில்லை. நல்லா கண்ணாடி போட்டுக்கிட்டு பாருங்கள்.முட்டாள்களை விட ஆதரவாளர்கள் என்னை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் காதற்ற முட்டாள்களை விட, எனக்குப் பின்னால் ஒரு சுவர் போல நிற்கும் ஆதரவாளர்கள் அதிகம். நான் இன்னும் உயர உயர எழும்பி நிற்பேன். இன்னும் சில ட்வீட்களை குஷ்பு பதிவு செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி