இந்நிறுவனத்தின் வீடுகள் மற்றும் வணிக திட்டங்களின் வளர்ச்சிக்காக சர்வதேச அளவில் ஐஎஸ்ஓ 9001;2008 தரச் சான்றிதழினைப் பெற்றுள்ளதாக டிஎல்எப் நேற்று தெரிவித்தது.பிரிட்டிஷ் சர்வதேச அங்கீகார தர மேலாண்மை அமைப்பிடமிருந்து கடுமையான பரிசோதனைகளுக்கு உட்பட்ட பின்னர் கட்டுமானப் பணிகளுக்காக தரச் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய நிறுவனம் இதுவாகும்.வர்த்தகம் மற்றும் குடியிருப்பு வளாக அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கான நோக்கத்திற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர் திருப்தி, கட்டுமான தரம் மற்றும் குறித்த காலத்தில் டெலிவரி போன்ற அனைத்துத் தரப்பிலும் இந்நிறுவனம் மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த சாதனை எங்களை மேலும் ஊக்குவித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கத்தூண்டும் என்று டிஎல்எப் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்தார். தர மேலாண்மை அங்கீகாரத்தை செயல்படுத்தும்விதத்தில் தங்களின் கட்டுமானப் பணிகளில் உயர்ந்த தரமும்,செயல்முறையும் வெளிப்படும் என்று டிஎல்எப் உறுதியளித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி