சென்னை:-சசிகுமார் தயாரிப்பில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தாரை தப்பட்டை படத்தின் கதாநாயகி கரகாட்டம் ஆடுபவர். கரகாட்டம் ஆடுபவர்களுக்கு தொப்பை இருந்தால் யதார்த்தமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே வரலட்சுமிக்கு சான்ஸ் கொடுத்தார் பாலா.
வரலட்சுமி, சசிகுமார் ஆகியோரை வைத்து கடந்த மாதம் டெஸ்ட் ஷூட் எடுத்தார் பாலா. அவற்றைப் பார்த்த பாலாவுக்கு வரலட்சுமிக்கு வயிறு அளவுக்கு மீறி பெரிதாக இருப்பதாக தோன்றியதாம். உடனே வரலட்சுமியை அழைத்து, தினமும் கடும் உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்க வேண்டும், முக்கியமாக தொப்பை இன்னும் குறைய வேண்டும் என்று கட்டளையிட்டாராம் பாலா.பாலாவின் அறிவுரைப்படி கடும் உடற்பயிற்சி செய்து பனிரெண்டு கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் வரலட்சுமி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி