லண்டன்:-நாம் வாழும் பூமியில் நிலப்பரப்பை விட கடல் பகுதி 3 மடங்கு அதிகம் ஆகும். நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் ஸ்டீவ் ஜேக்கப்சன் மற்றும் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் பிராண்ட்சன் சாமண்டிட் ஆகியோர் நடத்திய ஆய்வில் மொத்த கடல்நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த நீர் பகுதி வட அமெரிக்காவில் பூமிக்கு அடியில் 400 மைல் ஆழத்தில் இருப்பதாகவும், ஆனால் அது வழக்கமான திரவ நிலையில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.மேல் பகுதியில் உள்ள நீர் பூமிக்குள் இறங்கியதாலும், பூமியின் அடியில் உள்ள பாறை தட்டுகள் உருகியதன் காரணமாகவும் இந்த நீர் பகுதி உருவாகி இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி