சென்னை:-நடிகை சுருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்து வருகிறது.
இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி