நயன்தாரா ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தேவ்சிங் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஹாலிவுட்டின் ஒருவரும் நடிக்கிறார். தேவ்சிங் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய மகதீரா படத்தில் வில்லனாக நடித்தவர். இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.தேவ்சிங் கூறும் போது ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நான் நடிக்கிறேன். இதில் எனக்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளார்.
இரு கால கட்டத்தில் இந்த படத்தின் கதை நடக்கிறது நான் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளேன். ரஜினி ஒரு சகாப்தம், அவருடன் நடிப்பது பெருமையாக இருக்கிறது. எளிமையாக பழகினார். தனது ஒவ்வொரு படத்தையும் முதல் படம்போல் கருதி நடிப்பதாக தெரிவித்தார்.அவரிடத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார். லிங்காவின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடத்தப்படுகிறது. வில்லன்களுடன் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டையிடும் காட்சிகள் விறு விறுப்பாக படமாக்கப்பட்டன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி