ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு மூலம் டீகோ கோஸ்டா அடித்த பந்தை அலோன்சோ லாவகமாக கோல் அடித்து ஸ்பெயின் அணியின் கோல் கணக்கை துவக்கினார். ஸ்பெயின் அணி கோல் போட்டதும் சுதாரித்து நெதர்லாந்து அணி சுதாரித்து விறுவிறுப்பாக ஆடத்துவங்கியது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ரோபன் பாஸ் செய்த பந்தை வென் பெர்சி கோலாக மாற்ற தவறினார்.
ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் ஸ்பெயினின் இனியெஸ்டா அடித்த பந்தை சில்வா கோலாக மாற்றாமல் தவறவிட்டார். அடுத்த நிமிடத்தில் நெதர்லாந்தின் வென் பெர்சி தலையால் முட்டி அருமையான கோல் அடித்து கோல் கணக்கை 1-1 என சமன் செய்தார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இதே நிலை தான் நீடித்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது நெதர்லாந்து அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபென் அருமையான கோலை அடித்தார். இதன் மூலம் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. மீண்டும் 58வது நிமிடத்தில் ராபென் பாஸ் செய்த பந்தை பெர்சி கோலாக மாற்றத்தவறினார். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்பெயின் அணி டீகோ கோஸ்டாவிற்கு பதிலாக பெர்ணான்டோ டோரசை களமிறக்கியது. ஆனால் மீண்டும் 66வது நிமிடத்தில் ஸ்னீஜ்டர் ப்ரீ கிக் மூலம் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
எனினும் 68வது நிமிடத்தில் ஸ்பெனின் அணி வீரர் சில்வா அடித்த பந்து கோல் ஆன போதும் அவர் ஆப் சைடில் நின்றிருந்ததால் அது கோல் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர்சி அடித்த பந்தை ஸ்பெயினின் காசில்லாஸ் அருமையாக தடுத்து ஆடியதால் கோல் விழாமல் பார்த்துக்கொண்டார். மீண்டும் 72வது நிமிடத்தில் காசில்லாஸை ஏமாற்றி பெர்சி அருமையான கோல் அடித்து தனது அணிக்கு நான்காவது கோலை பெற்று தந்தார்.
ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் ராபென் மீண்டும் ஒரு கோல் அடித்தார். பின்னர் இரு தரப்பும் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இறுதியில் நெதர்லாந்து அணி ஸ்பெயினை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயனாக நெதர்லாந்து அணியின் பெர்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி