செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…

பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…

பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!… post thumbnail image
புதுடெல்லி:-வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி வெளியிட்டுள்ள ‘வாகன எரிபொருள் கொள்கை 2025’ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது சென்னை, மும்பை, டெல்லி உள்பட 26 நகரங்களில் ‘யூரோ-4’ (வெளியேறும் புகை அளவு)க்கு இணையான ‘பிஎஸ்-4’ தரமுள்ள எரிபொருள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் பிஎஸ்-3 தரமுள்ள எரிபொருள் தான் பயன்படுத்தப்படுகிறது. 2020ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் படிப்படியாக பிஎஸ்-4 அளவுக்கு எரிபொருள் தரத்தை உயர்த்த வேண்டும். இதற்கேற்றவாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்த ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிதிச்சுமையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 75 காசு உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரிக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி