புதுடெல்லி:-சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டதாகும். இதில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்று எதிரியின் இலக்கை தாக்கி அழித்து விட்டு, மீண்டும் இதே கப்பலில் வந்து தரையிறங்கும் வசதி உள்ளது.
தற்போது, கோவா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விக்ரமாதித்யா கப்பலுக்குள் நாளை ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கும் பிரதமர் மோடி கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டபடி சிறிது நேரம் பயணம் செய்கிறார்.சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட பின்னர், கப்பலில் இருந்தவாறே கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களிடையே மோடி உரையாற்றுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி