செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!…

உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!…

உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!… post thumbnail image
சாவ் பாவ்லோ:-இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. தொடக்கத்திலேயே பிரேசிலின் ஓலிக் அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் நுழைய தவறியது. அதே சமயம் ஆட்டம் தொடங்கிய பதினோராவது நிமிடத்தில் குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக் அடித்த பந்தை தடுக்க முயன்ற பிரேசில் வீரர் மார்சிலோ சரியான சமயத்தில் தனது காலை பின் வாங்காததால் அவரது காலில் பட்டு அவரே குரோஷியாவிற்கு கோல் அடித்து கொடுக்கும்படி அமைந்துவிட்டது. இதனால் 1-0 என்ற கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது.

குரோஷியாவிற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணியினர் தீவிரமாக விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 29வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மார் நீண்ட துரத்திலிருந்து அடித்த பந்து சரியாக கோல் போஸ்ட்டில் பட்டு கோலுக்குள் நுழைந்தது. இதனால் ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இரு அணிகளும் மேலும் ஏதும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஏறக்குறைய 62103 பார்வையாளர்கள் இந்த ஆட்டத்தை காண திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்கிய 69வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மார் கோல் போஸ்ட்டை நோக்கி விரட்டி சென்றார். அப்போது அவரை கோல் அடிக்காமல் தடுப்பதற்காக குரோஷியா வீரர் லோவ்ரன் அவரது கையை பிடித்து இழுத்ததால் லோவ்ரென்னுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன் நெய்மாருக்கு ப்ரீ கிக் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்த ப்ரீ கிக்கை பயன்படுத்தி நெய்மார் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். அவர் அடித்த பந்தை குரோஷிய கோல் கீப்பர் கைகளால் தடுத்தும் கூட அதையும் மீறி பந்து கோலுக்குள் நுழைந்தது. இதனால் இன்று தொடங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு கோல் அடித்த பெருமை நெய்மாருக்கு ஏற்பட்டது.மீண்டும் ஆட்டம் தொடங்கிய 90வது நிமிடத்தில் பிரேசில் வீர்ர் ஆஸ்கார் நீண்ட துரத்திலிருந்து அழகாக ஒரு கோல் அடித்து ஸ்கோரை 3-1 என்ற கணக்கிற்கு கொண்டு சென்றார். இறுதி வரை குரோஷியா அணியினர் கோல் அடிக்க முயன்றும் பிரேசில் வீரர்களின் அபார ஆட்டத்தால் அது முடியாமல் போனது. இதனால் 3-1 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இரண்டு கோல் அடித்த பிரேசிலின் நெய்மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி