செய்திகள்,திரையுலகம் லட்சுமி மேனன் ,கார்த்தி இணையும் ‘கொம்பன்’!…

லட்சுமி மேனன் ,கார்த்தி இணையும் ‘கொம்பன்’!…

லட்சுமி மேனன் ,கார்த்தி இணையும் ‘கொம்பன்’!… post thumbnail image
சென்னை:-‘பிரியாணி’ படத்தை அடுத்து கார்த்தி, ‘மெட்ராஸ்’ என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். ‘அட்டகத்தி’ ரஞ்சித் டைரக்டு செய்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா என்ற புதுமுகம் நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து கார்த்தி புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘கொம்பன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், கார்த்தி ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா டைரக்டு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி