இந்நிலையில், 1997ல் இங்கிலாந்து ராணி எலிசபத்தை சென்னைக்கு அழைத்து வந்து கமல் பிரமாண்டமான முறையில் தனது மருதநாயகம் படத்துக்கு பூஜை போட்டார். ஆனால், பின்னர் பைனான்ஸ் பிரச்னையால் அப்படம் நிறுத்தப்பட்டது. ஆனால், இப்போது அப்படத்தை தயாரிக்க ஒரு ஹாலிவுட் நிறுவனம் முன்வந்துள்ளதாம். அதனால், உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில நடித்து முடித்தும் அப்படத்தை மீண்டும் தூசு தட்டுகிறாராம் கமல்.
அதோடு, 1997ல் அப்படத்துக்கு 85 கோடி பட்ஜெட் போட்ட கமல், இன்றைய நிலையில், மருதநாயகத்தை முடிக்க 500 கோடி வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதற்கு அந்த நிறுவனம் தயார் நிலையில் உள்ளதாம். அப்படி 500 கோடி செலவில் மருதநாயகம் உருவானால், இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில தயாரான ரஜினியின் எந்திரன் படத்தை முறியடித்து. முதலிடத்தை கமலின் மருதநாயகம் பிடித்து விடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி