இந்நிலையில் கராச்சி விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கியபிறகு, அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை தொடங்கியுள்ளது. வடக்கு வசிரிஸ்தானின் தர்கா மண்டி கிராமத்தில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகளும், இன்று அதிகாலையில் தண்டே தர்பாக்கல் பகுதியில் நடந்த தாக்குதலில் 10 தீவிரவாதிகளும் இறந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கராச்சி விமான தாக்குதலையடுத்து பாகிஸ்தான் அரசும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடங்கியது. நேற்று முன்தினம் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பழங்குடியினர் பகுதியில் ஜெட் விமானம் மூலம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி