இந்நிலையில் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார் பிரியங்கா சோப்ரா. காரணம் அவரது தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. ராணுவத்தில டாக்டராக பணியாற்றி பல வீரர்களின் உயிரைக் காப்பாற்றியவர். அவர் மீது ப்ரியங்காவுக்கு அளவுகடந்த பாசம் உண்டு.சமீபத்தில்தான் அவர் இறந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு டாக்டர் அசோக் சோப்ரா என்று மும்பை மாநகராட்சி பெயரிட்டுள்ளது.
இதற்காக ஒரு விழாவையும் அது ஏற்பாடு செய்துள்ளது. இந்த தகவல் பிரியங்காவுக்கு கிடைத்ததும் அடுத்த பிளைட் பிடித்து இந்தியா திரும்பி விட்டார்.என் தந்தைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம் இது. உலகத்தில் வேறு எந்தவொன்றுக்காகவும் இந்த விழாவை நான் தவற விடவிரும்பவில்லை என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். பிரியாங்கா சோப்ரா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி