சென்னை:-சிங்கம் 2வின் வெற்றிக்குப் பிறகு சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.
படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கலாம் எனத் தெரிகிறது.ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்துக்கு பூச்சாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி