செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கவுரவம்!…

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கவுரவம்!…

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கவுரவம்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுத் துறையில் பணியாற்றி வருபவர் டாக்டர் சந்தோஷ் கே.சீலன். விண்வெளி விஞ்ஞானியான இவர் தமிழ்நாட்டில் உள்ள கடலூரைச் சேர்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் அமெரிக்காவில் உயர்ந்த அந்தஸ்து பெற்ற செஸ்டர் பிரிட்ஸ் பேராசிரியர்கள் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சந்தோஷ் கே.சீலன் தனது வாழ்நாளில் விண்வெளி ஆய்வுத்துறையில் ஆற்றிய சிறந்த பணிகளை பாராட்டும் வகையில் அவருக்கு கவுரவம் மிக்க இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது.இதுபற்றி கருத்து தெரிவித்த சந்தோஷ் கே.சீலன், தனக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்றும், இது ஒரு மிகப்பெரிய கவுரவம் என்றும், தனது பெயரை பரிந்துரைந்தவர்களுக்கும், தேர்வு செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

வடக்கு டகோடா பல்கலைக்கழகத்தில் சேரும் முன், இந்தியாவின் தொலையுணர்வு திட்டத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள சந்தோஷ் கே.சீலன், புத்தகங்களும் மற்றும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி