டாக்கா:-வங்காளதேசத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சில்ஹெத் ஸ்டேடியத்தின் சுவர் இடிந்து விழுந்தது.ஸ்டேடியத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் தகர கொட்டகை அமைத்து சிலர் தங்கியிருந்தனர்.
மழையில் நனைத்து ஊறிப்போயிருந்த அந்த சுவர் நேற்று அதிகாலையில் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. அப்போது உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் ஆவர்.
வங்காளதேசத்தில் சில்ஹெத் உள்ளிட்ட 3 ஸ்டேடியங்களில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்றன. இதற்காக சில்ஹெத் ஸ்டேடியத்தில் சீரமைக்கும் பணிகள் தாமதமானது. ஐசிசி ஆய்வாளர்கள் அங்கு பலமுறை ஆய்வு செய்ததையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டு உலகக்கோப்பை போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி