ஏற்கனவே இந்த இயக்கம் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் ஈராக்கில் 2–வது பெரிய நகரான மொசூல் நகரை அவர்கள் கைப்பற்றினார்கள். சுமார் 5 லட்சம் தீவிரவாதிகள் திடீரென நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்து ஒட்டுமொத்த நகரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.இதையடுத்து அங்கிருந்த அரசு படைகள் மற்றும் போலீசார் தப்பி ஓடினார்கள். அவர்களுடன் அந்த நகரில் வசிக்கும் 5 ஆயிரம் மக்களும் வெளியேறி உள்ளனர். தற்போது மொசூல் நகரம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மொசூல் நகரில் இருந்த துருக்கி நாட்டின் தூதுரகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்த 50 ஊழியர்களை சிறைப்பிடித்து சென்றனர். அவர்கள் கதி என்ன ஆனது.என்று தெரியவில்லை. மொசூல் நகரில் 15 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் பிடித்து சென்றனர். பின்னர் அவர்களை தூக்கிலிட்டு கொன்றார்கள்.இதற்கிடையே ஈராக்கின் இன்னொரு முக்கிய நகரமான திக்ரீத்தையும் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இது ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊராகும்.நகரின் 4 பகுதி வழியாக புகுந்த தீவிரவாதிகள் அரசு படைகளை தாக்கிவிட்டு நகரை கைப்பற்றினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் தெருக்களில் தீவிரவாதிகளுக்கும், ஈராக் அரசு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல் இன்னொரு முக்கிய நகரான சமராவிலும் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அதையும் அவர்கள் கைப்பற்றக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே தீவிரவாதிகளின் தளபதி அபுமுகமது அல்அதானி பேசிய ஆடியோ ஒன்று இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஈராக்கில் அனைத்து நகரங்களையும் நாங்கள் கைப்பற்றுவோம், அடுத்ததாக தலைநகரம் பாக்தாத், கர்பாலா நகரங்களை கைப்பற்ற போகிறோம். முக்கிய இடங்களை கைப்பற்றும் நாங்கள் எங்கள் குறிக்கோளை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோவில் அவர் 15 நிமிடம் பேசி இருக்கிறார்.தீவிரவாதிகள் திடீரென 2 நகரங்களை கைப்பற்றி இருப்பது ஈராக் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக ஈராக் பிரதமர் கூறும்போது, ஈராக்கில் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நகரங்களை விரைவில் மீட்போம். அரசு படைகள் கடுமையான பதிலடி கொடுக்கும். தீவிரவாதிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.என்று கூறியுள்ளார்.
மேலும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களை மீட்க உதவும்படி அமெரிக்காவை ஈராக் கேட்டுக் கொண்டுள்ளது. தீவிரவாதிகள் மீது உடனடியாக விமான தாக்குதலை தொடங்கும் படியும் ஈராக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுவரை விமான தாக்குதலை தொடங்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி