புதுடில்லி :-இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். முதன்முறையாக இன்போசிஸ் அல்லாத பிற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் இந்த பொறுப்பிற்கு வர இருக்கிறார். தற்போது தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள எஸ்.டி.சிபுலாலுக்கு பதிலாக விஷால் சிகா பொறுப்பேற்க இருக்கிறார்.
மேலும் இன்போசிஸ் நிறுவனம் உருவாக காரணமானவர்களில் ஒருவரான என்.ஆர்.நாராயணமூர்த்தியும், இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு முழுவதுமாக விலகுகிறார். கடந்த ஓராண்டாகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தை சரி செய்வதற்காக, நாராயணமூர்த்தியை கடந்தாண்டு மீண்டும் செயற்குழு தலைவராக்கியது இன்போசிஸ் நிறுவனம். இந்நிலையில் அவர் தற்போது விலக இருக்கிறார். அதேசமயம் இனி அவர் கவுரவ ஆலோசகராக மட்டுமே இருப்பார் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி