செய்திகள்,திரையுலகம் ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!…

ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!…

ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை வேகமாக முடித்து வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும் சீக்கிரமே பாடல்களை தருமாறும் அவரை கேட்டுக்கொண்டு வருகிறாராம்.தீபாவளிக்கு லிங்கா வெளிவருவது உறுதிதான் என்கிறார்கள்.

இதற்கிடையே, மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடத்தும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை தொடங்கும்போதே தீபாவளி ரிலீஸ் செய்து சொல்லித்தான் ஆரம்பித்தார் விஷால். அதேபோல், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’யும் தீபாவளிக்கு வந்து விடும். தற்போது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதால் அப்படம் வெளிவருவதும் உறுதியாகியுள்ளது.

இந்த பட்டியலில் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் மட்டுமே இன்னும் உறுதியில்லாமல் இருக்கிறது. தீபாவளிக்கு வந்து விடும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லிக்கொண்டாலும் கெளதம்மேனன் தரப்பில் ட்ரை பண்றோம் பார்க்கலாம் என்கிறார்கள். ஆக, அஜீத் படம் படம் இந்த தீபாவளி ரேஸில் இருந்து விலகிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி