செய்திகள்,திரையுலகம் அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?… post thumbnail image
சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

அனுஷ்கா 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சூப்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதன் பின் அருந்ததி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார்.இதுவரை சுமார் 40 படங்களில் நடித்துள்ள அனுஷ்காவிற்கு அவரது பெற்றோர் ஒரு சில வரன்களையும் பார்த்து விட்டார்களாம். தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், அனுஷ்காவின் திருமணப் பேச்சு ஆரம்பமாகும் என்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக அனுஷ்காவின் திருமணச் செய்திதான் ஆந்திரத் திரையுலகில் அடிபட்டுக் கொண்டிருக்கிறதாம். ஒரு பக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் சில ஹீரோக்களுக்கும் ஏமாற்றமாக இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால், அனுஷ்காவை தங்களது படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என இன்னும் சில ஹீரோக்கள் முயன்று வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி