சென்னை:-இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர் சிம்புவும், நயன்தாராவும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக சிம்பு-நயன்தாரா ஜோடியாக இணைந்து ஆடும் பாடல் ஒன்றை 1500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் வைத்து படமாக்கியுள்ளனர். இதனை, இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியன் தனது வலைத்தளத்தில் கூறியுள்ளார். பொதுவாக சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்படும் ஹெலிகாம் காமிராக்களை கொண்டு இப்பாடலை படமாக்கியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி