சென்னை:-ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கிய காமெடியனாக சந்தானம் நடிக்கிறார். ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறையவே உள்ளதாம். அதோடு காமெடியை இன்னும் ஒர்க்அவுட் செய்ய நினைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது, இன்னொரு காமெடியனாக கருணாகரனை படத்தில் இணைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கருணாகரன். காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதையடுத்து, சமீபத்தில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே படத்திலும் கிருஷ்ணாவுக்கு இணையான வேடத்தில் இவரும் நடித்திருந்தார்.
இந்நிலையில்,ரஜினியின் லிங்கா படவாய்ப்பும் கிடைத்திருப்பதால் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் கருணாகரன். இந்த படத்தில் கிடைத்தது தன்னைப்பொறுத்தவரை அரிய வாய்ப்பு என்பதால் வேறொரு படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டை லிங்காவுக்கு வாங்கிக்கொடுத்து நடிக்கிறார் கருணாகரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி