செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!… post thumbnail image
லண்டன்:-உலகம் முழுவதும் செல்போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செல் போன் சேவை வளர்ந்து வருகிறது.இந்நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து எக்சீடர் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் புளோனா மாத்யூஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், செல்போன்களை பேண்ட் மற்றும் டிரவுசர் பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களின் விந்தணுவின் உற்பத்தி மற்றும் நீந்தி சென்று கருமுட்டையை சென்றடையும் வேகத்திறன் குறைகிறது. மேலும் விந்தணு உயிரற்ற தன்மை ஆகிவிடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

செல்போன் செயல்பட தொடங்கும் போது ஏற்படும் அதிர்வினால் வெளிப்படும் கதிரியக்கம் விந்தணுவின் செயல்பாட்டை குறைத்து மலட்டு தன்மையை உருவாக்கும். இது 1492 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி