இந்நிலையில் நேற்று வடக்கு ஈராக்கில் உள்ள மொசூல் நகரில் புகுந்து அங்கிருந்து ராணுவம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் தாக்கு பிடிக்க முடியாத ராணுவம் ஆயுதங்களை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.அதை தொடர்ந்து அங்குள்ள கவர்னர் மாளிகை, ராணுவதளம், போலீஸ் நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளையும் பிடித்தனர். சிறைகளை தகர்த்து அங்கிருந்த கைதிகளை விடுவித்தனர்.மொத்தத்தில் மொசூல் நகரையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மொசூல் தலைநகர் பாக்தாத்துக்கு அடுத்த படியாக ஈராக்கின் 2–வது மிகப்பெரிய நகரமாகும். இது எண்ணை வளம் மிகுந்தது.
தீவிரவாதிகளின் பிடியில் மொசூல் நகரம் வீழ்ந்ததும் அங்கு தங்கியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே மொசூல் நகரை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொசூல் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரதமர் தூரி கமால்–அல் மலிக் பிறப்பித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி