சென்னை:-நடிகை பிரியாஆனந்த் வாமனன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நூற்றி என்பது’, வணக்கம் சென்னை, எதிர் நீச்சல் படங்களில் நடித்துள்ளார். தற்போது வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
அனிரூத் 3 படத்துக்கு இசையமைத்து கொலை வெறி பாடல் மூலம் பிரபலமானார். எதிர் நீச்சல் படத்துக்கு இசையமைத்த போது பிரியா ஆனந்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். இப்போது அது காதலாக மலர்ந்துள்ளதாம். இரு வரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்க்கிறார்கள்.
பிரியாஆனந்தை பார்க்க படப்பிடிப்பு தளத்துக்கே போய் வருகிறாராம். ஏற்கனவே ஆண்ட்ரியாவை அனிரூத் காதலித்தார். இருவரும் முத்தமிடும் படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பிறகு அந்த காதல் முறிந்தது. இப்போது பிரியா ஆனந்துடன் ஜோடி போட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி