அதோடு, கிழக்கு சீமையிலே படம் வந்த நேரத்தில் லட்சக்கணக்கில் தனது சம்பளத்தையும் உயர்த்தியவர். அதனால் சிறிய பட்ஜெட் கம்பெனிகள் வைரமுத்துவை நெருங்கவே பயந்து ஒதுங்கி நின்றன. ஆனால் இப்போது காலம்மாறி விட்டது. புதுமுக பாடலாசிரியர்களின் படையெடுப்பு வைரமுத்து போன்ற முன்னணி பாடலாசிரியர்களுக்கு பெரிய தேக்கததை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிசியாக பாடல் எழுதி வந்த வைரமுத்து அவ்வப்போது ஒரு படத்துக்கு பாடல் எழுதும் நிலையில் இருக்கிறார்.
அதனால், முன்பு மாதிரி முன்னணி கம்பெனிக்குத்தான் பாட்டெழுதுவேன் என்பதை விட்டு விட்டு சிறிய கம்பெனிகளுக்கும் இறங்கி வந்து பாட்டெழுதுகிறார். அதோடு, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்துக்கு பாதி சம்பளம் மட்டுமே வாங்கி பாட்டெழுதிய வைரமுத்து, இப்போது சில புதிய கம்பெனிகளுக்கும் பாதி சம்பளம் வாங்கிக்கொண்டே பாட்டெழுதுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி