வி.ஆர்.டி.டி ஆர்ட்ஸ் பிலிம்ஸ், விஸ்டம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பகடை பகடை. திலீப்குமார், திவ்யா சிங், ரிச்சு, கோவை சரளா, இளவரசு, மயில்சாமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.முரளி. இசை: ராம்ஜி, ஏ.சி.ஜான்பீட்டர். பாடல்கள்: தமிழமுதன், பால்முகில். வசனம், வி.பிரபாகர். இயக்கம், சசிசங்கர்.
படம் பற்றி நடிகை கோவை சரளா பேசும்போது, இதுவரை பல கேரக்டர்களில் நான் காமெடி செய்திருந்தாலும், இதில் நடித்துள்ள அரசியல்வாதி கேரக்டர் வித்தியாசமானது. எனக்கே புது அனுபவமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் சினிமா தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். அதுவும் சின்ன பட்ஜெட்டில் தயாரிப்பது ரொம்ப கஷ்டம். நல்ல படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் இதற்கும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி