பெத்தன்னகரே சீனாவை கடந்த ஆண்டு போலீசார் என் கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அவனது கூட்டாளிகள் தற்போது சிறையில் உள்ளனர். அவர்கள் சீனாவின் வாழ்க்கையை படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் வினோத் காம்ளியின் படம் தாதா சீனாவின் பகுதியிலேயே நடந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று கருதிய போலீசார் படப்பிடிப்புக்கு தடை விதித்தனர்.
படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற போலீசார் படப்பிடிப்பை நிறுத்தியதோடு. சீனாவின் வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் சூழ்நிலையில் அவரைப் பற்றி படம் எடுக்க கோர்ட் அனுமதி வேண்டும் என்று கூறி படப்பிடிப்பு குழுவினரை திருப்பி அனுப்பி விட்டனர். இந்த சம்பவம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி