சென்னை:-‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் 2010ல் வந்தது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்து இருந்தனர். வித்தியாசமான கதை களத்தில் அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்.
இதன் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் செல்வராகவன் வேறு படங்கள் இயக்கப்போய் விட்டார். தற்போது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக செல்வராகவன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2–ம் பாகத்தை அடுத்த வருடம் எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இதில் கார்த்தியே மீண்டும் கதாநாயகனாக நடிப்பாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 3டியில் எடுப்பது குறித்தும் முடிவெடுக்கவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி