இந்த விமானம், இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையும் தோல்வியில் முடிந்தது.இப்போது கடல் ஆராய்ச்சியாளர்கள் மத்திய இந்தியப் பெருங்கடலின் எதிரே இந்தியாவின் தென்முனையில் கடலுக்கு அடியில் குறைந்த அதிர்வு சத்தத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த சத்தம் மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதாக இருக்கக்கூடும் என இதைக் கண்டுபிடித்துள்ள பெர்த் கர்டன் பல்கலைக்கழக கடல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அலெக் டங்கன், ”நியூயார்க் டைம்ஸ்” ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். இந்த சத்தத்தின் ஆடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கேதரின் டீ என்ற பெண்மணி, தனது கணவருடன் கொச்சி நகரிலிருந்து தாய்லாந்து நாட்டில் உள்ள புக்கெட் நகருக்கு ஒரு படகில் இந்தியப் பெருங்கடலை கடந்து சென்றபோது, மலேசிய விமானம் மாயமான நாளில், நடுவானில் ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்ததைத் தான் பார்த்ததாகத் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆராய்வதாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி