இதை பார்த்த சர்கார், வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த தனது அண்ணன் சாஹரை கூச்சலிட்டு அழைக்க முயன்றார். சாஹர் வந்து விட்டால் தான் திருடியது தெரிந்து விடும் என்பதால் சர்காரை பிடித்து பக்கத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார்.பின்னர், ஹஜ்ரா கதவை மூடி விட்டு சென்றுவிட்டார். அந்த வேளையில் வெளியில் சென்றிருந்த சர்காரின் அம்மா வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை திறந்து உள்ளே வேகமாகச் சென்றார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் சுயநினைவில்லாமல் சர்கார் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே சிறுமியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறினர்.இதுகுறித்து சர்காரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஹஜ்ராவை கைது செய்தனர். குடிப்பதற்கு பணம் இல்லாததால் 20 ரூபாயை திருடியதாகவும், சிறுமி பார்த்துவிட்டதால் அவளை கொன்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி